கலைக்கும், அதிகாரத்திற்குமான உரசலில், ஒரு நாட்டுப்புற இசைக் கலைஞனின் போராட்டமே கதை! பஞ்சாபின் அசலான கிராமத்து வாழ்வை அடையாளப்படுத்தும் திரைப்படம். பொற்கோவில் கலவரம், சீக்கிய எழுச்சி, இந்திரா படுகொலை போன்ற சமகால வரலாறு வருகிறது. பஞ்சாப் நாட்டுப்புற இசையில் அசத்துகிறார் ஏ.ஆர். ரஹ்மான்; நெட்பிளிக்சில் வெளியாகியிருக்கும் வரலாற்று ஆவண திரைப்படம் அமர்சிங் சம்கிலா பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது சமீபகால வரலாறாகும். 1960ல் பஞ்சாபில் பிறந்த சீக்கிய தலித் கலைஞனான சம்கிலாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தை இம்தியாஸ் அலி இயக்கியிருக்கிறார். இளம் வயதிலேயே ...