ஊழல்வாதிகளை கண்டடைவது, ரெய்டு நடத்துவது, ஆவணங்களை சேகரிப்பது, ஆட்சியாளர்கள் பேரம் பேச உதவுவது.. என்ற ரேஞ்சுக்கு தான் அமலாக்கத் துறை செயல்பட்டுள்ளது என அம்பலப்படுத்திவிட்டன ஆங்கில பத்திரிகைகள்! இதோ எத்தனை ஊழல்வாதிகள் பாஜகவால் காப்பாற்றப்பட்டுள்ளனர் பாருங்கள்: கடந்த மார்ச் 31ந்தேதி “தந்தி டிவி.” க்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில், ‘அமலாக்கத் துறை எதிர்கட்சிகளை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுவது’ பற்றிய கேட்ட கேள்விக்கு, ”இ.டி. யை நான் உருவாக்கவில்லை , பி.எம். எல். ஏ. என்ற சட்டத்தையும் நான் கொண்டு வரவில்லை, அவை ...