அமெரிக்க வரலாற்றில் ஒரு தனி மனிதர் அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் அங்கீகாரமின்றி, எமர்ஜென்சி அதிகாரங்களை கையிலெடுத்து, சட்டத்திற்கு புறம்பாக வரிவிதிப்பு செய்வது இதுவே முதல் முறையாம். பொருளாதார வரிவிதிப்பிற்காக எமர்ஜென்சி அதிகாரங்களை அதிபர் டிரம்ப் கையிலெடுக்க முடியாது என்கின்றனர் அமெரிக்க சட்ட வல்லுனர்கள்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள “விடுதலை நாள் வரி விதிகள்” (Liberation Day Tariffs) அகில உலகிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலுமுள்ள வர்த்தக உறவுகள் அதிர்ச்சிக்குள்ளானதால் பங்குச் சந்தைகள் படு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. ஏன் இந்த ...