இந்த அமைச்சரவை மாற்றங்கள் அனைத்துமே முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட முடிவுகளே என்றாலும், அதன் பின்னுள்ள அரசியல் ஆழமானது. ஏன் சிலரது பதவி பறிக்கப்பட்டது? ஏன் சிலருக்கு வழங்கப்பட்டது? எதற்கு இந்த மாற்றங்கள்? இவை எளிதில் உய்த்தறிய முடியாதது…என்றாலும், உண்மை இது தான்; திமுக அமைச்சரவையில் சில மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. இந்த மாற்றங்கள் தொடர்பான உரையாடல்கள் எல்லாம் அவரவர்கள் அனுமானத்தில் இருந்தும், அனுபவத்தில் இருந்தும் விவாதிக்கப்படுகின்றன. ஆனால், எதற்கு சில அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்? எதற்கு சில அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு எந்த ...