நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? நம்மை ஆட்சி செய்பவர்கள் நாம் ஓட்டு போட்டு அனுப்பியவர்கள் தானா…? அல்லது வானத்தில் இருந்து குதித்த அவதார புருஷர்களா? கிட்டத்தட்ட 600 நாட்களாக ”நாங்கள் வாழும் நிலத்தை அபகரிக்காதீர்கள்” எனப் போராடும் விவசாயிகள் பல முறை முயற்சித்தும் முதல்வரை பார்க்க முடியவில்லை.. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கவன ஈர்ப்பு பேரணி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளை துறக்கும் போராட்டம்.. ஆகிய பலகட்ட போராட்டங்களை நடத்திய மேல்மா விவசாயிகள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவி, ஏகப்பட்ட வழக்குகள், குண்டர் சட்டம், ...












