இந்த போர் நிறுத்தம் என்பது ஈரானின் வெற்றியாகும், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகளின் சட்டவிரோத தாக்குதலுக்கு கிடைத்த பேரிடியாகும். மேற்காசியாவின் இந்த நிகழ்வு உலக அரசியலையே புரட்டி போட்டு, அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கத்தை வீழ்த்த சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் தயாராகிவிட்டதையே காட்டுகிறது; ஒரு அலசல்; அமெரிக்கா மற்றும் ஈரானிடையே நடக்கும் மேற்காசிய போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் ஒருவழியாக ஞாயிறன்று இணைய வழியில் கையெழுத்தாகி உள்ளது. “ஈரானுடன் ஒப்பந்தம் ரெடி, அமெரிக்கா எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றது” என 38 முறை டிரம்ப் அறிவித்து தோல்வியடைந்த ...
















