உழைப்பையே மூலதனமாக்கி வாழ்நாளெல்லாம் உழைத்த  உதிரித் தொழிலாளர்களின் வயதான வாழ்க்கைக்கு ஆதாரமாகத் திகழ்வது தான் நலவாரியங்கள்! இதில் சேர்வதே கஷ்டமா?, அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கான தரவுகள் அழிந்து விட்டனவாம்! திகைத்து நிற்கும் தொழிலாளர்களை அலைக் கழிப்பது முறையா? மூட்டை தூக்குவோர், கட்டட வேலை செய்வோர், தையல்காரர், ஆட்டோ ஓட்டுநர், வீட்டு வேலை செய்வோர், மண் பாண்டத் தொழிலாளர், செருப்பு தைப்போர், முடி திருத்துவோர், மீனவர், பனையேறுவோர், விவசாயக் கூலிகள், ஓவியர்கள், நெசவாளர்கள்.. என பல்வேறு முறைசாரா தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு என தனித்தனி தொழிலாளர் ...