அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். பியூட்டி பார்லர் போகாமலே முகத்தை பொலிவாக வைத்துக் கொள்வதில் இருந்து தாய்ப் பால் சுரப்பு, பித்த வெடிப்பை சரி செய்தல்.. என ஏகப்பட்ட, வியக்கத்தக்க மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பயன்படுத்துவது எளிது, பலன்களோ பெரிது; வித்தியாசமான இதன் பேரைக் கேட்டதும், ‘இது அரிசி போன்று இருக்குமோ…’ என்று நினைக்க வேண்டாம்.  இது ஒரு மூலிகையே..! இதற்கு ‘சித்திரப் பாலாடை’ என்ற பெயரும் உண்டு. அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை ...