சாமானிய மக்களுக்கு  மலிவு விலை அன்னசாலையான அம்மா உணவகத்தை புதுப்பித்து புத்துணர்வோடு செயல்படுத்த முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார். அம்மா உணவகம் பொலிவிழந்ததற்கு காரணம், அரசியல் மட்டுமல்ல! அதில் உள்ள  நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அதை புதுப்பித்து செயல்படுத்துவது கஷ்டமாகும்; வெறுமனே ஒரு அரசாணை மூலம் இந்த உணவகங்களை புதுப்பிக்க முடியாது. அவ்வளவுக்கு நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் இதில் உள்ளன. அவற்றை களைவதற்கு முயலாமல் வெளியிடப்படும் அரசாணை வெற்றிகரமான செயல்பாட்டுக்கு உதவாது. நோக்கம் நல்லது என்றாலும் அதை சாத்தியப்படுத்தும் வழிமுறைகளை கண்டடையாமல் செயல்படுத்த ...