பாசக அரசு 2014ல் ஆட்சிக்கு வந்தது முதல் அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்கள்  தாக்குதலுக்கு உள்ளாகின்றன. கூட்டாட்சி கேள்விகுள்ளாகியுள்ளது. சட்டங்கள் வழியே சிறுபான்மையினரை சரிய வைக்கும் முயற்சிகளும், நீதிமன்றங்களின் வழியே நிராதரவாக்கும் நிலைமைகளும் தொடர்ந்து கொண்டுள்ளன. இந்தச் சூழலில் தங்களை  தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறார், நீதிபதி ஹரிபரந்தாமன்; எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர மறுக்கும் நிலை தொடர்கிறது. சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத அளவில் மாநில அரசுகள் ஆளுநர்களின் செயல்பாட்டை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தை அணுகுவது ...