நாட்டில் எது நடந்தாலும் அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வது தான் அரசியல்வாதிகளின் இயல்பு. கரூர் பெரும் துயரில் அவரவர் அரசியலுக்கு ஏற்ப ஆதாயத்தை அள்ளத் துடிக்கின்றன அரசியல் கட்சிகள்! இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தவெகவைத் தவிர்த்த மற்ற அரசியல் கட்சிகளில் முன்னணியில் நிற்பது யார்?  பாரபட்சமற்ற ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்; எப்போது எது நடக்கும் என அனுமானிக்க முடியாததே மனித வாழ்க்கை. அதிலும் அரசியலில் எப்போது  எது நடக்கும்? சூழல்கள் எப்படி மாறும் என கணிக்க முடியாது. மாறுகின்ற சூழல்களை கூர்ந்து அவதானித்து தனக்குரிய ...