லட்சக்கணக்கில் வைப்புத் தொகையாம்! 10 முதல் 20 நாட்களுக்கு முன்பே அனுமதி கடிதம் தர வேண்டுமாம்! நடமாடும் கழிப்பறைகளை கொண்டு வைக்க வேண்டுமாம்….!  போராடங்கள், பரப்புரைகளுக்கான உரிமை கூட இனி வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தானா? போலீசாருக்கு என்ன பொறுப்பு?  அவர்கள் களத்தில் இருப்பார்களா? இருந்தது போல கணக்கு காட்டுவார்களா..? தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு  தமிழ்நாட்டரசு கட்சிகளை அழைத்து பேசியுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட  கட்சிகள், அதாவது நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ...