சேமிப்பு இல்லாத வாழ்க்கை சேதாரமாகிவிடும். தவறான இடத்தில் சேமிக்க கொடுப்பது ஆதாரத்தையே அழித்துவிடும்! சேமிக்கும் பணத்தை என்னென்ன வழிமுறைகளில் முதலீடு செய்யலாம்..? ரிஸ்க் எடுக்க விருப்பமா? ரிலாக்ஸ் சேமிப்பு விருப்பமா? கடந்த 5 கட்டுரைகளில் அரசாங்கம் மக்களுக்காக உருவாக்கிய சேமிப்பு – முதலீடு – பென்சன் திட்டங்களைப் பார்த்தோம். இவை எல்லாம் பாதுகாப்பானவை. குறிப்பிட்டுள்ள வட்டி கொடுத்து விடுவார்கள். ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். என்றைக்கும் பாதுகாப்பான முதலீடுகளுக்கு வருமானம் அதிகமாக இருக்காது. எந்த அளவு ஒரு முதலீட்டில் ரிஸ்க் அதிகம் உள்ளதோ, அந்த ...