என்ன அஜெண்டாவுடன் கல்வித் துறையை அரசு இயக்குகிறது? கல்வித் துறையை நாசமாக்கும் வியூகங்களா  தமிழ்நாட்டில் நடக்கிறது? ஆளாளுக்கு ஆசிரியர்களை ஆட்டுவிப்பதா? அவமானப்படுத்துவதா? அரசு பள்ளி ஆசிரியர்கள் என்றால் இளக்காரமா? பள்ளிக் கூடங்கள் அதிகாரத்தைக் காட்டும் இடமா? பள்ளிகளைக் கோயில்கள் என்றும், ஆசிரியர்களை தெய்வங்கள் என்றும் கைகூப்பித் தொழுத காலம் ஒன்றிருந்தது. இப்போதோ ஆசிரியர்களைப் பெற்றோர்கள் செருப்பால் அடிப்பதும், பொதுமக்கள் அவதூறுகள் பேசுவதும் வெகு சாதாரணமாக நடக்கிறது! ஆளும் அரசுகள் கல்வியைத் தங்கள் பிடியில் கொண்டுவரும் போக்கு பல வழிகளில் தொடர்ந்து நடக்கிறது. அதனால் ஆசிரியர்களது ...