ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஏழை, எளிய, நடுத்தர பிரிவினர்களுக்கு அரசு மருத்துவமனைகளே விமோச்சனமாகும். இது உணர்ச்சிகரமாக அணுக வேண்டிய ஒற்றை சம்பவமல்ல! இங்கு மக்கள் சந்திக்க நேரும் துயரங்கள், மருத்துவர்களின் அணுகுமுறை, மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அனைத்தையும் உள்ளடக்கியது; அரசு மருத்துவர் கத்திக்குத்தான சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர் அமைப்புகள் யாவரும், ”தாக்கிய இளைஞருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்” எனப் பேசி உள்ளனர். உயிர் காக்கும் ...