மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள்..என எல்லாவற்றிலும் பற்றாகுறை! பெருந்திரளான ஏழை,எளிய, நடுத்தர பிரிவு மக்களின் ஒரே புகலிடமாகத் திகழும் அரசு மருத்துவமனைகளை அழிவின் விளிம்புக்கு கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. அகில இந்திய அளவில் அரசு மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் மிக வலுவானது! ஆனால், சமீப காலமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஈடுகட்டும் விதமாக அரசு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தாத நிலையில் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்திக்க நேருகிறது! சாதாரண ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு ...
மா.சுப்பிரமணியம் நல்லவர். ஆனால், அவர் கட்டுப்பாட்டில் தான் சுகாதாரத் துறை உள்ளதா..? என சந்தேகப்படும் அளவுக்கு ஊழல் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது! வரலாறு காணாத மன உளைச்சலை சந்தித்துள்ள அரசு மருத்துவர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் அறிவித்து உள்ளனர். ஏழை, எளிய மக்களுக்கு உடம்பு சரியில்லை என்றால், அவர்களுக்கான ஒரே புகலிடம் அரசு மருத்துவமனை தான்! ஆனால். அங்குள்ள அதிகாரிகளுக்கோ இது பணம் பார்க்கும் அமுத சுரபி!எதற்கெடுத்தாலும் காசு,பணம், துட்டு என மருத்துவத் துறை அதிகாரிகள் சுகாதாரத் துறையை சூறையாடி வருகிறார்கள்! இதை நினைத்தால் வேதனையாக உள்ளது. ...