‘தமிழகத்தில் இன்னும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்தாகலாம்’ என்ற நிலைமை உள்ளது! இது ஏதோ தொழில் நுட்ப கருவிகளை சரியாக பராமரிக்காததால் உருவான பிரச்சினையல்ல. அரசு மருத்துவ கல்லூரிகளின் அடிப்படை தேவைகளே போதாமையாக உள்ளன! பேராசிரியர்களும், மாணவர்களும் கொந்தளிப்பில் உள்ளனர். தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி மற்றும் திருச்சி, தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளதானது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பாண்டு ...