யாரைத் தான் நம்புவதோ..? தெரியவில்லை…! 2,500 பேர் சம்பந்தப்பட்ட வேலை வழங்கலில் பல நூறு கோடிகள் லஞ்சம் பல்வேறு தரகர்களின் வழியாக நடந்துள்ள ஆதாரங்களை டெல்லி அமலாக்கத் துறை கடந்த ஏப்ரலில் கண்டறிந்த பிறகும் நவம்பர் வரை கமுக்கமாக வைத்திருந்து டீல் செய்வதன் பின்னணி என்ன..? இந்த அரசு வேலைக்காக ஒரு லட்சத்து இருபதாயிரம் இளைஞர்களின் படிப்பும், உழைப்பும், தவிப்பும் தகர்க்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய மோசடி 2500 பேர் சம்பந்தப்பட்ட வேலை வழங்கலில் – ஒவ்வொரு வேலைக்கும் தலா 25 லட்சம் முதல் 35 ...













