புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் குறித்த பல மர்மங்களுக்குள் நாம் போகவில்லை. சித்தர்களும், யோகிகளும் வாழ்ந்த தமிழ் மண்ணில் அரவிந்தர் குறித்த ஆன்மீக மாயை ஆதிக்க சக்திகளால் தொடர்ந்து கட்டமைக்கபடுகிறது. ஆனால், ஒரு விடுதலைப் போராளியான அரவிந்தர் எப்படி ஆன்மீகவாதியானார், ஏன், எதனால்? என்பதற்கு பாரதியார், பாரதிதாசன், வ.ரா ஆகியோர்களே சாட்சியாகும்; பாரதியாரும், அரவிந்தரும் சம காலத்தவர்கள்! தேச விடுதலைக்காக பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடியதால் இருவரும் தேடப்படும் குற்றவாளியாக வெள்ளைக்கார அரசால் அறிவிக்கப்பட்டனர். பிரிட்டிஷ் ராஜ்யத்தில் இருந்து விடுபட்டு பிரென்ச் அரசின் வசமிருந்த புதுச்சேரியில் ...



















