மதுரையின் அழகியதொர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்க திட்டமாம்! மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பால் மக்கள் கொந்தளித்து ஊர் கூட்டங்கள், போராட்டங்கள், இயக்கங்களின் கூட்டுச் செயல்பாடுகள்.. என வேகம் எடுத்துள்ளது. இங்கே தரும் தெளிவான தகவல்கள் இந்த போராட்டம் எதற்காக என்பதில் உள்ள நியாயத்தை உணர்த்தும். மதுரை, மேலூர் வட்டத்தில் உள்ள அ. வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்து இருக்கிறது. இங்கேடங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24- ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது. கடந்த நவம்பர்-7, 2024 அன்று சுரங்கங்கள் மற்றும் ...
ஸ்டெர்லைட் மூலம் தூத்துக்குடியை தூங்கா குடியாக்கி 15 உயிர்களை காவு வாங்கிய வேதாந்தா நிறுவனம், தற்போது மதுரை மாவட்டத்தில் மலைகளை விழுங்கும் ‘குவாரி சுரங்கங்கள்’ நிறுவி, பேரழிவில் தள்ள உரிமை பெற்றுள்ளதாம்! தேரோடும் சீரான மதுரை, தற்போது போராடும் ஊரான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறித்த பார்வை; அரிட்டாபட்டி, மதுரைக்கு அருகில் மேலூரை ஒட்டியுள்ள மிக அழகான கிராமம். இந்த கிராமம் மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. களிஞ்ச மலை, நாட்டார் மலை, ஆப்டான் மலை, ராமாயி மலை, ...