ஒரு வழியாக தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்திற்கு தந்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையர் அருண்கோயல் ராஜினாமா, சி.ஏ.ஏ அமலாக்கம்..என ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விவகாரங்களை எப்படி புரிந்து கொள்வது எனப் பார்ப்போம்; மோடி அரசின் தேர்தல்பத்திர திட்டம் சட்டத்திற்கு புறம்பானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை , இந்த பத்திரங்களை வாங்கியவர்களின் விவரங்களும், பெற்ற கட்சிகளின் விவரங்களையும் மார்ச் -6 ந் தேதி கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், ...

தேர்தல் ஆணையர் சுதந்திரமாக செயல்பட முடியாதா? ஏன் இத்தனை சிக்கல்கள்! தேர்தல் ஆணையரை கைப்பாவையாக்கும் பாஜக அரசுக்கு நீதிமன்றம் கடிவாளம் போட முன் வந்துள்ளது! இதில் வெகுண்ட சொலிசிடர் ஜெனரல், நீதிபதிகளையே மிரட்டுகிறார். வெற்றி பெறப் போவது நீதிமன்றமா? பாஜக அரசின் அதிகாரமா..? ஒரு வாரமாக தேர்தல் ஆணையம் அதன் ஆணையர்கள் அவர்களது நியமனம் மற்றும் செயல்பாடு பற்றி ஊடகங்கள் பரவலாக பேசி வருகின்றன. இதற்கு காரணம் நடந் து முடிந்த இமாச்சல் மாநில தேர்தலோ அல்லது  நடக்கவிருகின்ற குஜராத் தேர்தலோ அல்ல. மாறாக தேர்தல் ...