ஆறுகளைத் தேடி -4 தமிழ் நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் பேரதிசயங்களை கொண்டது கன்னியாகுமரிமாவட்டம்! கொட்டித் தீர்க்கும்! குதூகலித்து ஓடும்! கண்களை விரிய வைக்கும்! இதயங்களை அள்ளும்! மனதை வருடும், மயக்கம் கொள்ள வைக்கும்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்..! இங்கே ஒரு சிறிய அறிமுகம்; குமரி மாவட்டத்தில் ஓடும் தாமிரபாணி ஆற்றை நலம் விசாரிக்க எண்ணி நீங்கள் ஒரு மடல் எழுதினால், அதன் முகவரியில், கோதையாறும் பறளியாறும் தோன்றும் வனப்பகுதியும் இடம் பெற்றாக வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றி மேற்கு திசையில் பாய்ந்தோடி ...