காளிகாம்மாள் கோவில் காம அர்ச்சகர் கார்த்திக்கை காப்பாற்ற முயன்றும், முடியாமல் கைது செய்துள்ளனர். தருமபுர ஆதினத்தின் பாலியல் ஜல்சா வீடியோக்களை கைப்பற்றி, காப்பாற்றியதும் ஸ்டாலினே! கோவில்களையும், கல்வி நிறுவனங்களையும் மட்டுமாவது பாலியல் படுபாதகத்தில் இருந்து காப்பாற்றுமா திமுக அரசு? சட்டம், ஒழுங்கு அமல்படுத்தலில் தமிழகம் எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது என்பதற்கு சமீபகாலச் சம்பவங்களே உதாரணம். முக்கியமாக எந்தெந்த இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். கவலையில்லை என நம்புகிறோமோ, அங்கெல்லாம் தான் அதிகபட்ச ஆபத்தை நம் பெண்கள் சந்திக்க வேண்டியுள்ள சூழலில் இன்று தமிழகம் உள்ளது. ...