”அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் 25 புகார்கள் அளித்திருந்தது. இந்த மூன்றாண்டுகளில் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதிமுக ஊழல்களில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளை பாதுகாக்கும் திமுக, தற்போது தானும் ஊழலில் திளைக்கிறது” -அறப்போர் ஜெயராமன்; ஊழலுக்கு எதிராக போராடி வரும் அறப்போர் இயக்கம் 2018 ஆம் ஆண்டில், அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களும் அதானி நிறுவனமும் இணைந்து, நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 6,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததை அம்பலத்திற்கு கொண்டு வந்தது. 1.2 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை ...