அறம் வாசக நண்பர்களுக்கு வணக்கம். அறம் இணைய இதழில் வெகுஜன பத்திரிகைகள் கவனப்படுத்த தவறிய தகவல்களையும், அறிய வேண்டிய உண்மைகளையும் எமது சக்திக்கு உட்பட்ட வகையில் எழுதி வருகிறோம். இவை சகலருக்கும் சென்றடையவே அறம் கட்டணமில்லாத இதழாக வருகிறது. பலனடையும் வாசகர்கள் தாங்களாகவே முன் வந்து பங்களிக்க வேண்டும் என்ற நிலைபாட்டின் காரணமாகவே, விளம்பரங்களை தவிர்கிறோம். இந்த தேர்தலையொட்டி ஒரு சில அரசியல் கட்சிகள் விளம்பரம் ஏற்பீர்களா..? எனக் கேட்டதற்கு நாம்  மறுத்துவிட்டோம். இத்தகு சமரசமற்ற நிலையில், வெளிவரும் இதழுக்கு விரல் விட்டு எண்ணத்தக்க ...

எந்தக் கட்சியையும், இயக்கத்தையும் சாராமல் உண்மைக்கான தேடலை மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொண்டு அறம் இணைய இதழ் வந்து கொண்டுள்ளது. ஓரளவு கணிசமான வாசகர் பரப்பும் அமைந்துள்ளது! ‘பொய்மையும்,போலித்தனமும் கோலோச்சும் சமூகத்தில் வாய்மையை சமரசமின்றி பேசும் குரல் ஒன்று அவசியம்’ என்று நல்லோரால் உணரப்படுகிறது! ஆனால், ‘அந்தக் குரல் இந்த சமூகத்தில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இருளை கிழிக்கும் அறத்தின் ஒளியை என்றென்றும் பாதுகாப்பேன்’ என முன் வருபவர்கள் மிகக் குறைவாக இருப்பது தான் பிரச்சினையே! வாசகர்கள் பங்களிப்பின்றி அறம் தொடர்ந்து வர இயலாது! ...