அடிமாட்டுக் கூலி, அடிப்படை வசதிகளற்ற அவலம், கூடுதல் வேலை,இரக்கமற்ற சுரண்டல், கேட்க நாதியற்ற துயரம், சட்டப் பாதுகாப்பின்மை…இந்தச் சூழல்களுக்கு இடையில் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் நம்மிடையே கவனிபாரற்று வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச புலம் பெயர்ந்தோர் நாளான  இன்று அவர்கள் படும் பாடுகளை சற்றே பார்ப்போமா…? “கோயமுத்தூரில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இதன் கட்டுமானத்தில்   புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவாகவே வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவரின் கண்முண்ணே நடைபெறும் விதிமீறலை  அவர் கண்டுகொள்ளவில்லை. பீகாரில் இருந்தும், ஒரிசாவில் ...

லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனைகள் நடத்தியதாக வெளிவரும் செய்திகள் இது நம் தமிழகத்தில் தான் நடக்கின்றவா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது! எனவே, ஒரு மிகப் பெரிய ஊழல் அரசாங்கத்தின் கீழும் சில நல்ல அதிகாரிகள் முயற்சித்து உறுதியோடு செயல்பட்டால், ஒரு சில ஊழல் அதிகாரிகளையாவது கைது செய்யமுடிகிறது என தெரிய வருகிறது! ஆனால், இந்த ரெய்டுகளைத் தொடர்ந்து இந்த அதிகாரிகள் முறையாக தண்டிக்கப்படுகின்றனரா..? என்ற கேள்வி எழுகிறது… தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் பணிகள் நடப்பதாகவும், ஊழல் அதிகரித்துள்ளதாகவும் ...

இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக நீண்ட நெடுங்காலமாகத் திகழ்ந்த மண் தான் வங்கம்! முற்போக்கு சீர்திருத்ததிற்கு ராஜாராம் மோகன்ராய், ஆன்மீகத்திற்கு விவேகானந்தர், அரசியலுக்கு சுபாஷ் சந்திரபோஸ், கவிதை இலக்கியத்திற்கு தாகூர், நவீன கதை இலக்கியத்திற்கு சரத்சந்திரர், சேவைக்கு அன்னை தெரசா….என்று இந்தியாவின் ஆகச் சிறந்த ஆளுமைகளை தந்த அந்த கலாச்சார தலை நகரம் இன்று நாளும், பொழுதும் கலவரபூமியாக மாறிக் கொண்டுள்ளது கவலையளிக்கிறது! முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தை இழந்தது ஒன்றும் அதிசயமல்ல! அரசியலில் தோல்விகள் வரும்,போகும்! ஆனால்,கட்சியே காணாமல் ...

இந்தியாவில் இதழியல் துறையின் இழி நிலைக்கு ’தி இந்து தமிழ் திசை’ ரஜினிகாந்திற்கு சிறப்பு புத்தகம் வெளியிட்டுள்ள நிகழ்வே சாட்சி! மலிவான ரசனை போக்குகளை மகத்தானதாக பூதாகரப்படுத்தி, பிரமிப்பூட்டி, கல்லா நிரப்ப வேண்டிய கட்டாயம் என்ன வந்தது ஒரு பாரம்பரிய பத்திரிகை குழுமத்திற்கு…? இன்றைக்கு நாடும், மக்களும் எவ்வளவோ சிக்கலான விஷயங்களை சந்தித்துக் கொண்டுள்ளனர். விவசாயிகளும்,தொழிலாளர்களும் சுதந்திர இந்தியாவில் இதுவரை சந்தித்திராத சோதனைகளை சந்தித்து எதிர்கொண்டு வருகின்றனர். ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியுள்ளது..! மனித உரிமை ஆர்வலர்கள் வேட்டையாடப்படுகின்றனர். கொரானா ஏற்படுத்திய பொருளாதாரச் சரிவிலிருந்து பல குடும்பங்கள் ...

தில்லியில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் மற்ற மாநிலங்களைவிடவும் பஞ்சாப் விவசாயிகள் வீறுகொண்டு போராடி வருகின்றனர்! பொதுவாக பஞ்சாபியர்கள் வீரம் செறிந்தவர்கள் என்றாலும், இதில் ஒரு விஷேச காரணம் உள்ளது.கடந்த காலங்களில் நாட்டில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சியின் படுபாதகமான விளைவுகளை சந்தித்த பிரதேசம் பஞ்சாப் தான்! அதிலிருந்து விவசாயிகளை மீட்டு குறைந்தபட்சமேனும் பாதுகாப்பு தருவதற்காக முந்தைய அரசால் உருவாக்கப்பட்ட வேளாண் சட்டங்களை தான் தற்போதைய அரசு உருக்குலைய செய்துள்ளது என்பது மட்டுமல்ல… கட்டியுள்ள கடைசி கோவணத்தையும் உருவப்பார்க்கிறது… இந்திய தலைநகரம் தன் சொந்த மண்ணின் ...

உலகமே பழித்தாலும், நீதிமன்றமே தடை ஏற்படுத்தினாலும், செய்வதெல்லாம் அக்கிரமம் என்று தெரிந்தே செய்வதில் பாஜக அரசுக்கு ஈடு இணை இல்லை என்பதற்கான சிறந்த அத்தாட்சி தான் புதிய பாராளுமன்ற கட்டிட பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா! உலகின் மிக அழகிய பாராளுமன்ற கட்டிடங்களில் நமது டெல்லி பாராளுமன்ற கட்டிடம் முதன்மையானது! இதன் கம்பீரமும்,எழிலும்,அழகியலும் பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும்! இது லார்டு பிரவீன் காலத்தில் ஆறாண்டு கட்டிடப் பணிகளையடுத்து 1927 ல் உருவானது! இன்னும் இரு நூற்றாண்டுகளுக்கும் மேல் தாக்குபிடிக்கும் வண்ணம் உறுதியான பிரிட்டிஷ் ...

மேட்டுக்குடியினர் மட்டுமே பங்கு பெற்று வந்த இந்திய கிரிக்கெட்டில் கிராமத்து எளிய மனிதனுக்கும் இடம் கிடைக்கும் காலம் கனிந்துவிட்டதன் எடுத்துகாட்டு தான் ’யாக்கர் ராஜா’ நடராஜன்! காலபரிணாம வளர்ச்சி அதன் போக்கில் பல தடைகளை தகர்த்து அடித்தளத்தில் உள்ள திறமையாளர்களையும் அடையாளம் கண்டு வருகிறது..! வேகப் பந்து வீச்சில் விரும்பத் தகுந்த ஆட்டக்காரராக வளர்ந்து வரும் நடராஜன் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் என்பதில் சந்தேகமில்லை! சேலம் மாவட்டத்தில் சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ...

கமலஹாசனின் சூட்சும அரசியல், நுட்பமான காய் நகர்த்தல்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதது! மதுரையில் இன்று தேர்தல்பிரச்சாரத்தை துவங்கிய கமலஹாசனிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்! கேள்வி; ஆன்மீக அரசியலும் மக்கள் நீதி மையமும் ஒன்றிணையுமா? கமல்; கட்சிகள் பிளவுபடவும் வாய்ப்புள்ளது, அணி கூடவும் வாய்ப்புள்ளது! இப்போதைக்கு இது தான் சொல்ல முடியும். இந்த பதிலில் என்ன புரிந்து கொள்வது? இன்னொருபக்கம் கட்சி ஆரம்பிக்கவுள்ளேன் என காலந்தாழ்ந்து அறிவித்த நிலையிலும் கூட, அதற்கான முன்னேற்பாடுகளை முன்னின்று செய்யாமல் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றுள்ளார் ரஜினி! அதனால், ...

தமிழக அரசியல் சூழல் மட்டுமல்ல, இந்திய அரசியல் சூழலே தற்போது மூன்று பிரிவுகளாக இயங்குகிறது. # பாஜக ஆதரவு நிலைபாடுள்ள கட்சிகள்! # பாஜகவால் இயக்கப்படும் சிறுகட்சிகள்! # பாஜகவை எதிர்க்கும் கட்சிகள்! இந்த வகையில் தன்னை ஆதரிக்கும் கூட்டணி கட்சிகளை  பாஜகவே வழி நடத்துகிறது! தன்னை வெளிப்படையாக ஆதரிக்க முடியாத வேறுபட்ட கொள்கை அடையாளம் கொண்ட கட்சிகளை எப்படியாவது வளைத்துப் போட்டு அவர்களின் லகானை தன் கையில் வைத்து இயக்குகிறது. மூன்றாவதாக தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றுக்கும் பதறியும்,கதறியும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தை தன்னை ...

இது ரஜினி பிறந்த நாளுக்கான சிறப்பு பதிவல்ல! யதேச்சையாக அந்தி மழை இதழின் யூடியுப் சேனலுக்காக தம்பி, பத்திரிகையாளர் தமிழ் கனல் என்னை நேர்காணல் செய்தார். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வெளிப்பட்டவிதம்,பிறகு அவருக்கு ஒரு சூப்பர்ஸ்டார் இமேஜ் கட்டமைக்கப்பட்ட போது எப்படி அவரது அணுகுமுறைகள் மாற்றம் கண்டண என கூறியுள்ளேன். அரசியல், ஆன்மீகம் குறித்த அவரது புரிதல்கள், அவரது இயல்பு…ஆகியவற்றை குறித்த என் மதிப்பீடுகளை இதில் பகிர்ந்துள்ளேன்! ரஜினிகாந்த் குறித்து தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்,மாயைகள் எப்போது எந்த காலகட்டத்தில் இருந்து தொடங்கி, பிழைப்புவாத இதழியல் துறையின் ...