பேசாமல் தவிர்க்க வேண்டும் என்றே நினைக்கிறேன். அரசியல் தொடர்பில் முற்றிலும் அலட்சியப்படுத்த வேண்டிய ஒரு மனிதன் இந்த உலகில் ஒருவர் உண்டென்றால், அது ரஜினிகாந்த் தான். சுயம் உணராத சூனியம் அவர்! சுயநலமே உருவான தற்குறி அவர்! அவரது வெற்றியும்,தோல்வியும் அவர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பது தான்! தன்னை எப்படி வேண்டுமானாலும் தங்கள் நலன்களுக்காக பேச வைக்க முடியும்,இயங்க வைக்க முடியும் என ஆதிக்க வர்க்கத்திற்கு அனுசரணையாளராக இருப்பது தன்னுடைய சாமார்த்தியம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ’அது சாமார்த்தியமல்ல, சகிக்கமுடியாத அநீதி’ என ...

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் அனைத்து தரப்பு விவசாயிகளிடமும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.ஆகவே, தாங்களும் தாங்கள் வாழும் இடத்திலேயே டெல்லிவிவசாயிகளுக்கு ஆதரவாக எழுச்சிகரமாக போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.தற்போது தமிழகத்தில் அங்குமிங்குமாக சில விவசாய அமைப்புகள் போராடிவருகின்றன. எனினும் அதை வலுவாக பெரிய அளவில் ஒருங்கிணைத்து செய்ய தமிழக விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. விவசாயிகள் போராட்டம் கட்சி எல்லைகளைக் கடந்து நடந்தாலும், அந்தந்த கட்சியில் உள்ள விவசாயிகள் இதில் பெருந்திரளாக பங்கெடுத்து வருகின்றனர். பாஜகவைத் தவிர்த்த ...

சமீபத்தில் தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கொண்டு கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை பெரும் விளம்பரத்துடன் திறந்து வைத்தது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் திட்டத்தில் ஏறக்குறைய ரூ. 500 கோடி அரசின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் சென்னை மாநகரின் அய்ந்தாவது கூடுதல் நீர்த்தேக்கமல்ல – கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு செல்லும் வழியில் இடைப்பட்ட நீர்த்தேக்கமாக திருப்பி விடும் வேலையை மட்டுமே செய்கிறது. இதில் தமிழ்நாடு அரசு பெருமைப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை. தெளிவான பொறியியல் நோக்கமின்றி ...

’’அப்பாடா ஒழிந்தது…’’ என்று பெற்றோர்களை பெரு மூச்சுவிட செய்ததும் ’’ஐயோ பறிபோகிறதே…’’ என இளைய சமுதாயத்தை கதறவைத்திருப்பதும்…வேறு,வேறு அல்ல! ஒன்றே! அது தான் பப்ஜி போன்ற ’டென்சண்ட் கேம்ஸ்’! தடை செய்த செய்தி!ஆனால் அப்படி பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியாது என்ற வகையில் இந்திய நிறுவனமான பெங்களூரைச் சேர்ந்த என்கோர் கேம்ஸ் FAU-G என்ற பெயரில் ஒரு மொபைல் விளையாட்டைக் கொண்டு வர உள்ளதாம்! அழிவிற்கான விளையாட்டு விளையாட்டு என்றால் உடலும்,உள்ளமும் ஒருங்கே இசைந்து மகிழ்வது, நண்பர்களோடு தோழமை கொண்டு வளர்வது என்று நாம் ...