சில புகழ்பெற்ற அறிஞர்களின் நூல்களையும், அப்பாவி எழுத்தாளர்களின் படைப்புகளையும் திருடித் தன் பெயரில் போட்டுக் கொள்ளும் பதிப்பாளர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள்! அம்பலப்பட்ட ஒரு சம்பவத்தை இந்தக் கட்டுரை பேசுகிறது! இன்னும் அம்பலப்படாத ‘யோக்கிய சிகாமணிகள்’ நிறையவே உள்ளனர்..! நாடாறிந்த அறிவியல் எழுத்தாளர் மணவை முஸ்தபா! 35 ஆண்டுகளாக யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியராக இருந்தவர். என்சைளோ பீடியா பிரிட்டானிகாவின் தலைமை பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார்! சுமார் அரை நூற்றாண்டு காலம் அறிவியல் தமிழுக்காக அயராது உழைத்தவர்! இதன் மூலம் அரிய சாதனையாக சுமார் பத்து லட்சம் ...