உள்ளாட்சிகளில் ஜனநாயகம் எப்படி ஊனப்பட்டுக் கிடக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சியாகும். ஒரு பள்ளிக் கட்டிடம் கேட்கிறது கிராம சபை. ‘கட்சிக்காரர்கள் வழியாக கேட்டால் மட்டுமே கிடைக்கும்’ என்கிறது வட்டார வளர்ச்சி அலுவலகம். நிதி ஒதுக்கீடு நடந்தும் கட்சிக்காரர்கள் கடைக்கண் பார்வை கிடைக்காததால் பரிதவிக்கும் மக்கள்; திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் உள்ள அழகுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி சுமார் 101 ஆண்டுகால பழமை வாய்ந்தது. சிதிலமடைந்து கிடக்கும் இந்தப் பள்ளியின் கட்டிடத்தில் தான் ஒரு ஆரம்பபள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்படுகின்றன. ...