ஓயாமல் சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்பவில்லை. நாளும், பொழுதும் மக்கள் பிரச்சினைகளை ஊன்றி கவனித்தும், அரசின் சட்ட திட்டங்களை பொது நலன் சார்ந்து விமர்சித்தும் அறம் இணைய இதழில் எழுதி வருகின்ற நான் என் கவனத்தை சிதறடிக்க விரும்பவில்லை. ஆனால், தமிழக அரசியல் சூழலில் சில அதிரடி மாற்றங்களுக்கான காலம் கனிகிறது; காரணம், எந்த பெரியாரை முன் நிறுத்தி திராவிட அரசியல் இயக்கங்கள் சுமார் 60 ஆண்டுகள் இங்கு  ஆட்சி அதிகாரத்தை செய்து வந்தனரோ.., அந்த பெரியார் இமேஜை உடைத்து சுக்கு நூறாக்கும் வண்ணம் ஒருவர் ...