அவுரி உற்பத்தியில் உலகத்திலேயே சிறந்து விளங்கும் நாடு இந்தியா! அவுரி பயிர்களுக்கு பின்னணியில் பல அரிய வரலாற்று செய்திகள் உள்ளன! மனித குலத்திற்கு அளப்பரிய பயன்கள் தரும் அற்புத மூலிகை! இயற்கையான மலமிளக்கியாகும். 18 வித விஷங்களை முறிக்கும். இன்னும் சொல்வதற்கு எத்தனையோ..! ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்ததற்கான காரணங்களில் முக்கியமானது ‘இங்கிருந்து சில ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நீல நிற இயற்கை சாயத்தை தரும் அவுரியைத் தேடித் தான்’ என வரலாற்றாளர்கள் கூறுகிறார்கள் . அப்போது அது இண்டிகோ ...