நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் இயற்கை பற்றிய புரிதல் இன்றியே நாம் வாழ்கிறோம். தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் வாழ்வாதாரமாக உள்ள ஆறுகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளன! அவற்றை மீட்டெடுக்கும் நோக்கமே இந்த தொடர்! இது தமிழ்நாட்டில் ஓடும் இயற்கை நீர் வழித் தடங்களின் ஆவணம்! ஆறுகள் மனித சமூகத்தின் நாகரிகத் தொட்டிலாக விளங்குகின்றன. உலகின் பல்வேறு தொன்மையான நகரங்கள் ஆற்றங் கரைகளில் தான் அமைந்துள்ளன. எனவே, ஆறுகள் பண்பாட்டு முக்கியத்துவம் பெறுகின்றன. உலகெங்கும் ஆறுகள் வேளாண்மை, குடிநீர் ,மின்னாற்றல், தொழிற்கூட பொருளுற்பத்திக்கு அடிப்படைத் ...