ஆங்கிலேயர்கள், இந்தியர்கள் என இரு தரப்பிலும்  புறக்கணிக்கப்பட்டவர்களே ஆங்கிலோ இந்தியர்கள்! இந்தியாவிற்கான இங்கிலாந்தின் பிணைக்கைதிகளாக உழன்றவர்கள்! ”இங்கிலாந்து எங்கள் தந்தையர் பூமி எனில், இந்தியா எங்களது தாய்நாடு” எனக் கூறும் ஆங்கிலோ இந்தியர்கள் மீது பாஜக அரசுக்கு ஏனிந்த கோபம்? ஐரோப்பிய ஆணுக்கும், இந்தியப் பெண்ணுக்கும் பிறந்த வம்சத்தில் வந்தவர்களை ‘ஆங்கிலோ இந்தியர்கள்’ என அழைக்கிறோம். தற்போது இந்தியாவில், ஆங்கிலோ இந்திய சமூகம் அருகி வரும் சமூகமாக உள்ளது. உள்நாட்டு மக்களுக்கு ஆங்கில மொழி, மேற்கத்திய இசை மற்றும் நடனம் கற்றுத் தருகிறவர்களாக இவர்கள் ...