இன்று சென்னை டே வாம்! மாநகரின் சில பகுதிகளில் கொண்டாடிக் களிக்கிறார்கள்.! யாருக்காக இந்தக் கொண்டாட்டங்கள்…? இந்த மாநகரத்தின் பெயரிலும் தமிழ் இல்லை. பேச்சு வழக்கிலும் தமிழ் இல்லை, கற்கும் கல்வியிலும் தமிழ் இல்லை, காணும் நிர்வாகங்களிலும் தமிழ் இல்லை. நீதிமன்றங்களிலும் தமிழ் இல்லை! இங்கே தமிழ் என்பது அரசியல் கட்சிகளுக்கு உணர்ச்சிகளை தூண்டி, ஆதாயங்களை அறுவடை செய்யும் பிழைப்புக்கான ஆயுதம் மட்டுமே. அதைக் கடந்து நடைமுறையில் ஆட்சி நிர்வாகத்தில், அடுத்தடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்துச் செல்வதில் சரியான திட்டமிடலோ, வழிகாட்டலோ இவர்களிடம் இல்லை ...
















