உலகப் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகனின் திருமண முன் வைபவ நிகழ்ச்சி குஜராத் ஜாம் நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும், 3,000 ஏக்கரில் புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கி, அனைத்து பிரபலங்களையும் அழைத்து பந்தாவுடன் நடந்துள்ளது. இந்த நிகழ்வுகள் குறித்த சில பார்வைகள்: அம்பானி ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட்க்கும் திருமணத்திற்கு முந்தைய ஒன்று கூடல் நிகழ்ச்சி மார்ச் 1,2,3 தேதிகளில் நடைபெற்றது. (ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது). இந்த திருமணத்தை வெகு விமரிசையான எக்கச்சக்கமான விதவிதமான ஆடம்பர உணவு வகைகள் ...