நோய்கள் தாக்க முடியாத கவசமே ஆடா தொடை! பொக்கிஷமான இந்த மூலிகை வீதி ஓரங்களில் தானாக முளைத்துக் கிடக்கிறது. இது இருதயம், இரைப்பை, நுரையீரல் ஆகியவற்றில் சளியாலும், வாய்வினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் மூலிகையாகும். இதன் பயன்களை பார்ப்போமா? “பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை தணிக்காத கோபதர்ற் றாகந் – தணிக்காமை யாலுண்டி யாற் புணர்ச்சி யாலீரத்தாற் சுமையால் மேலும் பிணிகளுறுமே” – தேரையர் நோய்கள் உடலில் உண்டாவதற்கான  காரணங்களை தேரையர் இந்தப் பாடல் விவரிக்கிறார். அதிக கோபம் மிக்க தாகம் மாறுபட்ட ...