பாசத்திற்கு ஏங்கிய அனாதையான பழங்குடி இளைஞன் நேசிப்பதற்கு ஒரு பெண்ணை கண்டடைந்தான். இருவரும் உயிருக்கு உயிராய் நேசித்தனர். சாதி வெறி பிடித்த பெண்ணின் பெற்றோரின் நர வேட்டையில் அவன் உடல் கருகி உயிருக்கு போராடி வருகிறான். காதல் மனைவியோ மிரட்டப்பட்டு வருகிறார்… முழு விவரங்கள்; வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிகவும் துடிப்பான பழங்குடி இளைஞர் செல்வகணபதி (24). சிறுவயதில் தந்தையை இழந்துள்ளார். பிறகு தாயையும் இழந்து பாட்டி அரவணைப்பில் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ஏழ்மை காரணமாக குழந்தை தொழிலாளியாகி, கடும் உழைப்பால் தற்போது ...