இந்தியாவில் பத்து கோடிக்கு மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். ஆதிவாசிகளின் சம்மதமின்றி எங்களை இந்துக்களாக அரசாங்கம் பதிவு செய்வதை ஏற்கமாட்டோம். இந்து மதம் பற்றி எதுவும் எங்களுக்கு தெரியாது. எங்கள் தொன்மை அடையாளத்தை ஏன் அழிக்கத் துடிக்கிறீர்கள்..? என அரசாங்கத்தை எதிர்த்து ஆதிவாசிகள் போராடி வருவது குறித்த அலசல்; மத்திய பிரதேசத்தில்,  ‘பில்’ என்கிற மிகப் பெரிய பழங்குடி இனத்தினர் உள்ளனர். இச் சமூகத்தைச் சேர்ந்த உமாங் சிங்கர், பழங்குடியினர் கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசியது அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. ”நாங்கள் ஆதிவாசிகள். இந்து மதத்தினர் ...