ஆனைமுத்து நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவது , பெரியார் எழுத்துக்களை தொகுத்ததில் ஆனைமுத்துவின் சாதனைகள், இந்தியா முழுமையும் இடஒதுக்கீடு மலர ஆனைமுத்து எடுத்த முயற்சிகள், மபொசிக்கும் – சீமானுக்கும் உள்ள ஒற்றுமை.. ஆகியவை குறித்து வாலாசா வல்லவன் நேர்காணல்; ஆனைமுத்து. நூற்றாண்டு விழா ஜீன்,2024 தொடங்கி ஜூன்2025 வரை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியினரால்!  அவரது சாதனைகளை விவரிக்கிறார், அக்கட்சியின் வாலசா வல்லவன்; ஆனைமுத்து அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறீர்கள். பெரியார் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியவர் அல்லவா ...