ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் அடிக்கடி நடக்கும்  இளைஞர்களின் தற்கொலைகள், குடும்பங்கள் நிலை குலைந்து நடுத் தெருவுக்கு வந்து நிற்கும் அவலம்.. என  பல கொடூர விளைவுகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. தமிழக அரசு இந்த சூதாட்டத்தை தடை செய்யுமா? அல்லது தடுமாறுமா..? ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து கொண்டிருக்கின்றன. ஆயினும்  இது, திறமைக்கான விளையாட்டு என்ற போர்வையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி பெற்று பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கின்றன ஆன்லைன் ரம்மி நடத்தும் அந்நிய நாட்டு  நிறுவனங்கள். நூற்றுக்கும் ...