ஆம்ஸ்டிராங் கொலையிலும், அதற்கு பிறகான உடல் அடக்க விவகாரத்திலும் தமிழக அரசு காட்டிய காட்டிய அலட்சியங்களும், ஒவ்வாமையும் உணர்த்தும் செய்திகள் என்ன..? பெளத்தத்தை முன்னெடுத்த தலித் சமூக தலைவரின் இறுதி அஞ்சலியை புறக்கணித்த தமிழகத் தலைவர்கள் மன நிலை எப்படிப்பட்டது..? சமத்துவ தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் அகால மறைவு தலித் அரசியலில் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. புது கண்ணோட்டத்தில் அறிவுசார் விவாதங்களை எழுப்பும் தலித் அரசியலுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக அவரின் பல செயற்பாடுகளை பட்டியலிடலாம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஏப்ரல் 14 அன்று, சென்னையில் ...

அதிரவைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையை அவதானித்துப் பார்க்கையில் ஆட்சித் தலைமையும், காவல்துறையும் மனது வைத்தால் தடுத்திருக்கக் கூடிய ஒன்றே என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது. ‘முடியட்டும் ஆம்ஸ்டிரங்கின் அரசியல் பயணம்’ என நினைத்ததற்கான காரணத்தை தேடுகிறது இந்தக் கட்டுரை; ஒரு பழுத்த நாத்திகக் குடும்ப பின்னணியோடு, அறிவுத் தேடலோடு தீரா வாசிப்பு பழக்கமும் கொண்டவர் மட்டுமல்ல, தன்னை சுற்றிலுமுள்ளவர்களையும் அறிவார்ந்தவர்களாக உருவாக்குபவராக இருந்துள்ளார் என்பது தான் ஆம்ஸ்டிராங் மற்ற தலித் தலைவர்களிடம் இருந்து வேறுபடும் புள்ளியாகும். வேறெந்த தலித் தலைவர்களையும் விட உண்மையிலேயே கல்வியில் ...