கட்சிகளைப் பிளப்பது, ஆள் தூக்கி அரசியல் செய்வது ஆகியவற்றின் மூலமே தன் அதிகார விரிவாக்கத்தை நடத்தி வரும் பாஜக ஆம் ஆத்மியில் ஆகப் பெரிய சதியை அரங்கேற்றி உள்ளது. ஆம் ஆத்மியின் 10 மாநிலங்களை எம்பிக்களில் 7 பேர் பாஜகவில் ஐக்கியமானதன் பின்னணியில் அதிகொடூர சதித் திட்டங்கள் உள்ளன; தலைநகராம் டெல்லியில் நேர்மையான ஆட்சி செய்து தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை கட்டணமின்றி எளிய மக்களுக்கு சாத்தியப்படுத்திய ஆம் ஆத்மி மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து அதன் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஸ் ...
















