டெல்லியை கைப்பற்ற மத்திய ஆட்சியின்  மிருகத்தனமான அதிகார பலம், கட்டுக்கடங்க பண விநியோகம், தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்பு, ஆர்.எஸ்.எஸ்சின் களப்பணிகள்..என சகல ஆயுதங்களையும் கொண்டு , ஆம் ஆத்மியை வீழ்த்தியுள்ள பாஜகவின்  சிஸ்ட மேட்டிக்கான சதி திட்டங்களும், சாகஸங்களும் திகைப்பில் ஆழ்த்துகின்றன; ஊழல் குறைந்த நிர்வாகம், சிறந்த கல்வி, தரமான மருத்துவம், சீரான குடிநீர் விநியோகம், நியாயமான மின் கட்டணம் ஆகியவற்றை சாத்தியப்படுத்திய ஆம் ஆத்மியை தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற வைத்தனர் டெல்லி மக்கள். அந்த ஆம் ஆத்மியை பாஜக தற்போது ...