ஆர்.எம்.வீயின் வாழ்க்கை வெற்றிகளும், வீழ்ச்சிகளும் நிறைந்தது! எம்.ஜி.ஆரின் அனைத்து வெற்றிகளுக்கு பின்பும், ஆர்.எம்.வியின் அர்ப்பணிப்பு இருந்ததை போலவே, எம்.ஜி.ஆரின் வீழ்ச்சிக்கும் தன்னை அறியாமலே துணை போனவர்! தமிழகத்தின் முக்கியமான சில அரசியல் திருப்பு முனைகளுக்கு காரணமானவர்! பொதிகை தொலைகாட்சியில் 20 வருடத்திற்கு முன்பு நண்பர் லேனா. தமிழ்வாணனைக் கொண்டு நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நான் செய்து கொண்டிருந்த காலத்தில் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அழைத்து ஒரு நேர்காணல் செய்தோம். ஏதோ ஒரு சந்திப்பு என்றில்லாமல் என்னைக் குறித்து அவர் முழுமையாக கேட்டறிந்த விதம், நிகழ்ச்சி குறித்த ...