ஆர்.எஸ்.எஸ்சின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவுகள் டெல்லியில் நடந்துள்ளன. அதன் இறுதி சொற்பொழிவில் பல அதிர்ச்சி குண்டுகளை வீசியுள்ளார் மோகன் பாகவத்.  நய வஞ்சகம், கலவர நெருப்பு, அடுத்தகட்ட நகர்வுகள்  போன்றவற்றை புதை குழியில் இருந்து வெளியில் எடுத்து காண்பித்தார் மோகன் பாகவத்; மேலும் பேச்சிற்கும், செயல்பாட்டிற்குமான நினைத்தே பார்க்க முடியாத மிகப் பெரிய இடைவெளியை கொண்ட ஒரு உரை எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக மோகன் பாகவத் பேசிய உரை அமைந்திருந்தது. இது நாள் வரை,  ”75 வயதிற்கு ...