அடேங்கப்பா..! எத்தனையெத்தனை குண்டுவைப்பு சம்பவங்கள்! இவை  யாவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ளன! இவற்றை இஸ்லாமியர்கள் செய்தனர் என நம்ப வைத்ததன் மூலம் தான் தற்போது பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது என்பதெல்லாம் பகீர் உண்மைகளாக அம்பலப்பட்டு உள்ளன! இந்து மதத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறி இளைஞர்களை ஈர்த்து அவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளித்து, அதன் மூலம் நாடெங்கும் பல குண்டு வெடிப்பு சம்பவங்களை இந்துத்துவ அமைப்புகள் நடத்தி உள்ளன! இதன் விளைவாகத் தான் 2014ல் பாஜக ஆட்சிக்கு ...