ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஏன் நேரு எட்டிக் காயாக கசக்கிறார்? ஏன் நேருவிற்கு எதிரான அவதூறுகளை அவர்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். காந்தியைக் கொன்றவர்கள், காந்தியின் சீடரை எப்படி அணுகினர்? ஆர்.எஸ்.எஸை நேரு எப்படி மதிப்பீடு செய்திருந்தார்? நேருவின் இறப்பிற்கு என்ன காரணம்? இந்தியா விடுதலை அடைந்த நாளுக்கு மறுநாள், முதல் பிரதம அமைச்சராக நேரு பதவி ஏற்றுக்கொண்டார். மதவாதத்திற்கும் பிரிவினை வாதத்திற்கும் எதிரான தனது தீர்க்கமான முடிவை அவர் நாட்டுக்குத் தெரிவித்தார். “குறும்பு செய்பவர்களும் தொல்லை தருபவர்களும் நமது எதிரிகள். அவர்களை ஒரு தீவிரத்தோடுதான் கையாளவேண்டியிருக்கிறது”. தேசத்தந்தை காந்தியின் படுகொலை, இந்து அடிப்படைவாதிகளின்மேல் அவரது ஐயங்களை ஆழப்படுத்தியிருந்தது. இந்து ராஷ்ட்டிரத்தை நிறுவும் அவர்களது வெளிப்படையான இலக்கைத்தாண்டி, இந்து மஹாசபா, ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் ...

ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு ஊடகங்கள், அவர்களின் சமூக வலைத்தளங்கள்..ஆகியவற்றில் மகாத்மா காந்தியின் தியாக போராட்ட மரபு ஊனமாக்கப்படுகிறது. மகாத்மா காந்தி மீது பொய், அவதூறு, விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். காந்தி கோழையாம்! கார்ப்பரேட்டுகளை வாழ வைப்பதே சேவையாம்! காலனி ஆட்சி காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக அகிம்சை போராட்ட முறைகளில் இந்திய மக்களை வழி நடத்தியதன் மூலம் மக்களை கோழையாக்கி விட்டார் என்று கூசாமல் சொல்கிறார்கள், இந்துத்துவவாதிகள்! தனி மனிதனது உயர்வுக்கு சொன்னதே மகாத்மா காந்தி அகிம்சை. அது அவரது அரசியல் போராட்ட வழிகள் அல்ல. ...

ச.முருகன், தண்டையார்பேட்டை,சென்னை பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கொலைகாரனை விடுதலை செய்வதா என ஒரு தரப்பினர் கொந்தளிக்கின்றனரே? 31 வருட நெடிய சிறைவாசம் என்பது தூக்கு தண்ட்னையை விடக் கொடியது! எந்தக் குற்றவாளிக்குமே இது போன்ற மிக நீண்ட சிறைவாசம் என்பது ஏற்புடையதன்று! அது சிறையின் நோக்கத்தையே சிதைத்துவிடும்! ஒருவரை விடுதலை செய்வதால் இந்த சமூகத்திற்கு எந்த பாதிப்புமில்லை என்ற அளவுகோலே போதுமானது! எம்.ராதிகா, தேனீ சில அரசியல் கட்சிகள் மொழி, சாதி, மதம் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் ஆதாயம் பார்க்கின்றனர் என்கிறாரே பிரதமர் மோடி? ...