மேற்குவங்க ஆளுநர் மாளிகையின் பெண் டெலிபோன் ஆபரேட்டரை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் ஆளுநர். ”அரசியல் சட்டம் கவர்னரை பாதுகாக்கிறது. இந்த வழக்கை காவல்துறை விசாரிக்க முடியாது” என்கிறார் அவர். மம்தா பானர்ஜியோ கவர்னரை தண்டிக்க துடிக்கிறார். அலசுகிறார் ஹரி பரந்தாமன். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு போட்டி நிலவுகிறது. எவர் மிக அதிகமாக மாநில அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துவது என்பதே. அந்தப் போட்டி! மேற்கு வங்கத்தின் ஆளுநர் விவகாரமோ வேறு மாதிரியானது. மேற்கு வங்கத்தின் ஆளுநராக இருப்பவர் ஆனந்த ...