ஆள் தூக்கி அரசியல் மூலம் தப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது, தவெக ! ஆள் தூக்கி அரசியல் என்பது சுயத்தை இழக்க வைக்கும் ஒரு தற்கொலைப் பாதையாகும். அதிமுகவுடனான விஜய்யின் அணுகுமுறை விவேகமற்றது மட்டுமல்ல, வினையில் முடியக் கூடியது! மற்றொரு அதிமுகவாக மாறுவது தான் தவெகவின் தணியாத லட்சியமா..? இதன் விளைவுகள் என்னாகும் தெரியுமா? ‘புத்தம் புதிய இளைஞர் கூட்டம்! அரசியல் ஊழல் திமிலங்களை வென்று வந்துள்ளார்கள்! பார்ப்போம், நல்ல மாற்றங்கள் வராதா?’ என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்க, ”அதிமுகவில் இருந்து மேலும் 15 நபர்கள் ...



















