ரிஷி சுனாக் ஏன் இங்கிலாந்து மக்களால் தூக்கி எறியப்பட்டார்? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? லேபர் பார்ட்டியின் வெற்றி அங்கு மாற்றங்களை ஏற்படுத்துமா? ஏமாற்றங்களை பரிசளிக்குமா..? புதிய பிரதமராகவுள்ள கியெர் ஸ்டாமரின் கொள்கையில்லா கோமாளித்தனங்கள் உணர்த்துவதென்ன..? இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஒரு பகுதி அயர்லாந்து அடங்கிய யு. கே. (United Kingdom) என்றழைக்கப்படும் பிரிட்டனின் தேர்தல் முடிவுகளால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பதினான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் (பழமைவாத கட்சி) கட்சியின் ரிஷி சுனாக் தலைமையிலான ஆட்சியை தோற்கடித்து தொழிலாளர் கட்சி ...